பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

11

கின்றன. அம்மா ஆற்றில் மீன்கள் கிடப்பதைப்பாா்த் திருக்கிறாய் அல்லவா?

பாப்பா:-ஆம், அப்பா. ஆற்றில் அவைகள் எவ்வளவு அழகாய்ப் பளபள வென்று மின்னுகின்றன.

அப்பா:-அம்மா! அந்த மீன்களும் தாயின் வயிற்றிலுள்ள முட்டையிலிருந்துதான் உண்டாகின்றன.

பாப்பா:-அது எப்படி அப்பா?

அப்பா:-அம்மா! மீனானது ஆற்றில் எங்கேனும் ஜலம் அதிக ஓட்டமில்லாமல் தேங்கி நிற்குமிடத்துக்குப் போய் அங்கே தன்னுடைய வயிற்றடியிலுள்ள ஒரு சிறு துவாரத்தைத் திறக்கும். அது வழியாக அநேக சிறு முட்டைகள் வெளியே வரும். அந்த மீன் அங்கேயேபின் போய்விடும். இரண்டு வாரம் சென்ற பின் பார்த்தால் அந்த முட்டைகளெல்லாம் வெடித்து சிறு சிறு மீன்கள் நீந்தி கொண்டிருக்கும். இப்படி மீன்கள் எல்லாம் முதலில் தாய் வற்றில் முட்டைகளாக வளர்ந்து பிறகு ஜலத்தில் தங்கி முதிர்ந்து வெடித்து மீன்களாக உண்டாகின்றன.

பாப்பா:-அப்படியானால் பறவைகள் எப்படி வளா்கின்றன. அப்பா?

அப்பா:-பறவைகளின் வயிற்றிலும் முட்டைப்பைகள் இருக்கின்றன. அங்கேதான் முதலில் அவை வளர்ந்து முதிர்கின்றன. அதன்பின் பறவையானது மரத்தின்

மீதோ அல்லது மரத்தின் பொந்துகளிலோ ஒரு கூடுகட்டி அதில் தன்னுடைய வாலுக்கடியேயுள்ள சிறு துவாரத்தின் வழியாக முட்டைகளையிடுகிறது. அதன்பின் அந்த முட்டைகளின்மீது உட்கார்ந்து அடைகாக்கின்றது. இரண்டு மூனறுவாரமானதும் முட்டைகள் வெடித்துக் குஞ்சுகள் வெளியே வருகின்றன. இப்படித்தான் சகல பட்சிகளுடைய முட்டைகளும் கூட்டில் முதிர்ந்து குஞ்சுகள் ஆகனறன.