பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

பாப்பா:-அப்பா! மரஞ்செடிகளின் விதைகள் மண்னிலும், மீன்களின் முட்டைகள் நீரிலும், பட்சிகளின் முட்டைகள் கூடுகளிலும் முதிர்ந்து விளைவதாகக் கூறுகிறாய் அப்படியானால் கன்றுக்குட்டி எங்கே உண்டாகிறது அப்பா!

அப்பா:- அம்மா! மரஞ்செடிகளின் முட்டைகள் முதலில் பூவில் விதையாகி பிறகு மண்ணில் முளைக்கின்றன. மீன்களின முட்டைகள் முதலில் வயிற்றியிலும் பிறகு நீரிலும் முதிர்ந்து மீன்கள் ஆகின்றன, பட்சிகளின் முட்டைகள் முதலில் வயிற்றிலும் பிறகு கூட்டிலும் முதிர்ந்து பட்சிகள் ஆகின்றன. ஆனால் மிருகங்களின் வயிற்றிலுள்ள முட்டைகள் வயிற்றில் பாதி வெளியில் பாதி முதிராமல் வயிற்றிலேயே முதிர்ந்து மிருகங்கள் ஆகின்றன.

பாப்பா:-அது எப்படி அப்பா?

அப்பா :-அம்மா! அவைகளின் வயிற்றிலேயே ஒரு கூடு இருக்கிறது. அதைக் கூடு என்று சொல்லாமல் கர்ப்பப்பை என்றே சொல்லுவார்கள். அந்தப் பையில்தான் முட்டைப் பையிலுள்ள முட்டைகளில் ஒன்று வந்து தங்கி கொஞ்சம் வளர்ந்து பருத்துக் குட்டியாகின்றது. குட்டி பருவமடைந்ததும் வெளியே வந்து பிறந்து விடுகின்றது.

பாப்பா:-அப்படியானால் குழந்தைகளும் அம்மா வயிற்றிலேயேதான் கர்ப்பப் பையில் வளர்ந்து குழந்தைகள் ஆகின்றனவோ, நானும் தங்கச்சியும் அப்படித்தான் வளர்ந்தோமோ அப்பா?

அப்பா:-ஆமாம். நீங்களும் முதலில் அம்மாவின் வயிற்றிலுள்ள முட்டைப் பையில் கண்ணுக்குத் தெரியாத சிறு முட்டைகளாக இருந்து பிறகு கர்ப்பப்பையில் வளர்ந்து குழந்தைகள் ஆனீர்கள். அப்படியேதான் எல்லா மனிதர்களும் கர்ப்பப்பையில் வளர்கிறார்கள்.