பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

ணெய் ஊற்றி திரித்திரித்துப் போடுகிறாள். அதன் பின் நீக்குச்சியை உரைத்துத் திரியில் வைக்கிறாள்.

அப்பா:-அப்பொழுது தீக்குச்சியிலுள்ள தீயானது திரியில் பற்றிக் கொள்கிறது. விளக்கு வெளிச்சம் தருகிறது, பார்த்தாயா?

பாப்பா:-ஆம் அப்பா! பார்த்தேன்.

அப்பா:-அப்பொழுது எது எரிகிறது? திரி எரிகிறது. ஆனல் வெறும் திரி எரியுமா? எரியும் கொஞ்ச நேரம்: பிறகு சாம்பலாகப் போய் அணைந்து போகும். அதனால் தான் அம்மா எண்ணெய் ஊற்றுகிறாள். அப்பொழுது திரி வெகு நேரம் வரை நன்றாக எரியும்.

பாப்பா:-ஆமாம், அப்பா! அதனால்தான் அம்மா அடிக்கடி விளக்கில் எண்ணெய் ஊறுகிறாறாள் போலிருக்கிறது.

அப்பா:-ஆமாம், அதற்காகத்தான். ஆனாலும் விளக்கு எரிவதற்கு எண்ணெய் ஊற்றித் திரிப் போட்டால் போதுமா?

பாப்பா:-அப்பா! போதாது. எண்ணெய் ஊற்றித்திரிப் போட்டு வைக்கிறாள். அப்பொழுது திரி எரியவில்லை, வெளிச்சம் உண்டாகவில்லை.

அப்பா:-அப்படியில்லை எப்பொழுது வெளிச்சம் உண்டாகிறது?

பாப்பா:-திரியில் தீக்குச்சியை உரைத்து வைத்தால் தான் விளக்கு எரிகிறது, இல்லையானல் எரியவில்லை.

அப்பா:-அம்மா, பூவில் விதையுண்டாவதும், மீன், பறவைகளின் வயிற்றில் முட்டை உண்டாவதும் மிருகம், மனிதர் வயிற்றில் குழந்தை உண்டாவதும் அதே மாதிரிதான்.

பாப்பா:-அது எப்படி அப்பா? தெரியவில்லைேயே