பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

15

அப்பா:-சொல்லுகிறேன். கேள். விளக்கில் எரிவதெல்லாம் எண்ணெயும் திரியும்தான். ஆனலும், அந்த இரண்டும் தானாக எரிய ஆரம்பிப்பதில்லை. தீக்குச்சியை உரைத்து வைத்தால்தான் எரிய ஆரம்பிக்கின்றன. தீக்குச்சியிலுண்டாகும் தீ அந்த எண்ணெயையும் திரியையும்' எரியும்படி ஆரம்பம் செய்து வைக்கின்றது. அதே போல் தான் அம்மா! பூவின் நடுவில் சூல் வயிற்றிலுள்ள முட்டைகளும் தாமாக விதைகள் ஆகிவிட முடியாது.

பாப்பா:-அப்பா! அந்தச் சிறு முட்டைகள் தானே விதைகள் ஆவதாகச்சொன்னாய். அந்த முட்டைகள் அந்தச்சூல் வயிற்றில்தானே விதைகளாக முதிர்வதாகச் சொன்னாய்.

அப்பா:-ஆம், அம்மா! அதெல்லாம் உண்மைதான். ஆளுல் அந்தச்சிறு முட்டைகளோடு வேறு ஒரு வஸ்து சேர வேண்டும்; அது சேர்ந்தால்தான் அந்த முட்டைகள் விதைகள் ஆக முடியும். அந்த வஸ்து சேராவிட்டால் விதைகள் உண்டாகா பூக்கள் காய் உண்டாகாமல் உதிர்ந்து போகும்.

பாப்பா:-அநேக பூக்கள் காயாகாமல் உதிர்ந்து போகின்றனவே, அதுதான் காரணமோ, அப்பா!

அம்பா:-ஆம், அம்மா! அதுதான் காரணம்.

பாப்பா:-அப்படியாளுல் காய் உண்டாகும் படி செய்யும் அந்த வஸ்து எது அப்பா! அந்த வஸ்து எப்படி அப்பா! காய் உண்டாகும்படி செய்கிறது?

அப்பா:-பூவின் நடுவிலே தண்டுபோல் ஒன்றிருக்கிறது, அதற்குக் கீலம் என்று பெயர் என்று சொன்னேனே, ஞாபகமிருக்கிறதா?

பாப்பா:-ஆம் அப்பா! அதன் அடியில்தானே சூல் வயிறும் அதனுள் முட்டைகளும் இருப்பதாக சொன்னாய்?

அப்பா:-அம்மா! அந்தக் கீலத்தின் பக்கத்தில்