பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

41

இழைய முடியும். அதைவிடப் பெரிய வஸ்து எதுவும் நுழைய முடியாது, ஆனல் தங்கச்சி கர்ப்பப்பையில் பத்து மாதம் வளர்ந்து பெரியவளாகி வெளியே வரவேண்டிய பருவம் வந்தவுடன் அந்தத் துவாரமும் கர்ப்பப்பை வாசலும் பெரியதாக விரிந்து கொடுக்கும். தங்கச்சி முதலில் கர்பபப்பையின் வாசல் வழியாகவும், பிறகு அந்தத் துவாரத்தின் வழியாகவும் மெள்ள மெள்ள வெளியே வருவாள். அப்பொழுது அம்மாவுக்கு அதிகக் கஷ்டமாயிருக்கும். இப்படிக் குழந்தை பிறப்பதைப் பிரசவம் என்றும் அப்பொழுது உண்டாகும் கஷ்டத்தை பிரசவ வேதனை என்றும் கூறுவார்கள்.

பாப்பா:- அப்பா! என்னைப் பெறும்பொழுதும் இப்படித்தான் அம்மா கஷ்டப்பட்டாளோ? அப்பொழுது அம்மாவுக்கு எவ்வளவு துன்பம் உண்டாயிருக்கும்!

அப்பா:- ஆம் அம்மா! இப்படித்தான் அம்மா உன்னைப் பெறும் பொழுதும் கஷ்டப்பட்டாள். எல்லாப்பெண்களும் பிரசவ காலத்தில் இப்படித்தான் வேதனையடைகிறார்கள். ஆனாலும் குழந்தை பெறுவதற்காக அவர்கள் அவ்வளவு கஷ்டத்தையும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுகிருர்கள்.

பாப்பா:- அப்பா! குழந்தை பிறந்த பிறகு என்ன செய்வார்கள்.

அப்பா:- குழந்தை பிறந்த பிறகு அதைக் குளிப்பாட்டித் துாங்க வைப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து அம்மாவிடம் பால் குடிக்க வைப்பார்கள். அது கொஞ்சம் குடித்துவிட்டு மறுபடியும் தூங்கும்.

பாப்பா:- அப்பா! தங்கச்சியைக் குளிப்பாட்டிக் கொண்டு வந்தவுடன் பார்த்தேன். அவளுடைய தொப்பூழில் துணி வைத்துக் கட்டியிருந்ததே, ஏன் அப்பா?

அப்பா:- அம்மா, அதுவா? தங்கச்சி அம்மா வயிற்றிலிருந்தபொழுது அம்மாவுடைய ரத்தம்தான்