பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருகூடசுந்தரம்

57

மோரிலும்தான் கால்ஷியம் என்னும் சத்து அதிகம். அந்தச்சத்தை அதிகமாகச் சாப்பிட்டால்தான் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப் பைக்குச் சமீபத்திலுள்ள எலும்புகள் பெரியதாக வளரும். அப்படி வளர்ந்தால்தான் அவர்களுக்குப் பின்னல் குழந்தை பெற எளிதாயிருக்கும்.

பாப்பா:— அப்பா! பழங்கள் சாப்பிடும்படி சொல்லுகிருயே, எந்தப்பழங்கள் நல்லவை அப்பா!

அப்பா:— அம்மா! எல்லாப் பழங்களும் நல்லவைதான். எந்தக்காலத்தில் எந்தப் பழங்கள் கிடைக்குமோ, அந்தப் பழங்களேயெல்லாம் சாப்பிடலாம். அவைகளில் ஆரஞ்சுப் பழமும் தக்காளிப் பழமும் நிரம்ப நல்லவை என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். தக்காளிப் பழத்தைச் சிலர் வேகவைத்துச் சாப்பிடுகிறார்கள். அது தவறு இந்தப் பழங்கள் எல்லாம் விலை அதிகமானவை, எல்லோராலும் வாங்க முடியாதவை. ஆதனால் நம்முடைய நாட்டில் எல்லாக் காலங்களிலும் எல்லோர்க்கும் சுலபமாகக் கிடைக்கக்கூடியபழங்கள் வாழைப்பழமும் ஒரு எலுமிச்சம்பழமேயாகும். நீங்கள் குழந்தைகள் தினந்தோறும் இரண்டு வாழைப்பழமும் ஒரு எலுமிச்சம் பழமும் சாப்பிட்டால் போதும். இந்த இரண்டு பழங்களும் வாங்க முடியாதவர்கள் நெல்லிக்காய் காலத்தில் நிறைய வாங்கி கொட்டைகளை நீக்கிவிட்டு உலர்த்திப்பொடி செய்து வைத்துக் கொண்டு தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஒரு கரண்டி பொடி சாப்பிட்டு வந்தால் போதும்.

பாப்பா:- அப்பா காய் கறிகளிலும் கீரைகளிலும் எவை நல்லவை?

அப்பா;- அம்மா? எவை நல்லவை என்று கூறுவதற்கில்லை. எல்லாம் நல்லவைதான். ஆனால் நம்முடைய நாட்டில் எல்லாக்காலங்களிலும் சுலபமாகவும், மலிவாகவும் கிடைக்கக்கூடிய கீரைகள் அரைக்கீரையும், முருங்கக்கீரையும், அகத்திக்கீரையும் தான். இந்த மூன்று கீரைகளும் மிக நல்லவைகளுங்கூட. காய் கறிகள் சாப்பிட்டாவது நல்லது. அவை-