பக்கம்:குழந்தை எப்படிப் பிறக்கிறது.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

குழந்தை எப்படிப் பிறக்கிறது?

கள் கிடையா விட்டாலும் பாதகமில்லை. கீரைகள் சாப்பிட்டால் போதுமானது.

பாப்பா:- அப்பா! வேறு என்ன சாப்பிடவேண்டும்?. சிலர் மாமிசம் சாப்பிடுகிறா்களே, அது சாப்பிடவேண்டுமா அப்பா!

அப்பா:- அம்மா! அது சாப்பிட வேண்டு மென்ற கட்டாயமில்லை. அதற்குப் பதிலாக பால், மோர், நெய் அதிகமாகச் சாப்பிட்டால் போதும். மாமிசம் சாப்பிடுகிறவர்களும் அதை வாரத்தில் இரண்டு முறைக்கு அதிகமாக்ச் சாப்பிடுவது நல்லதன்று. அப்படிச் சாப்பிடுவதிலும் ஈரலைச் சாப்பிடுவது நல்லதென்று டாக்டர்கள் கூறுகிருர்கள். அத்துடன் மாமிசத்தை விட முட்டையே சிறந்ததென்றும் அதையும் பூரணமாக வேகவைக்காமல் அரை குறையாக வேகவைப்பதே நல்லதென்றும் கூறுகிருர்கள்.

பாப்பா:- அப்பா! நாங்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் உண்டோ?

அப்பா:- ஆம். அம்மா! நீங்களும் சிறுவர்களும் சிறுமிகளும் எண்ணெய்யில் வேகவைத்த பலகாரங்களே அதிகமாக சாப்பிடக் கூடாது. அது போலவே அதிகமான காரமும் புளியும் சாப்பிடமாலிருப்பதே நல்லது.

பாப்பா:- அப்பா சிலர் வெற்றிலை போடுகிறார்கள், சிலா் பாக்கு மட்டும் தின்னுகிறார்கள், அது நல்லதா?

அப்பா:- அம்மா! வெற்றிலை இலை இருக்கிறதே அது நல்லது. ஆனால் அத்துடன் போடும் பாக்கு நல்லதேயில்லை. அதனால் நீங்கள் வெறும் வெற்றிலையை மட்டும் தின்னலாம். பாக்கைத் தொடவே கூடாது. அதுபோலவே தான் புகையிலையையும் தொடக்கூடாது. புகையிலேயை வெற்றிலையோடு மெறாலும் சரி, பீடி சிகரெட்டாகக் குடித்தாலும் சரி, உங்கள் தாதுவுக்கு அதிகமான தீங்கு செய்யும். அவைகள் நல்லனவேயில்லை. அதேமாதிரிதான் உங்களுக்குக் காப்பியும் தேயிலையும் நல்லதில்லை. பெரியவர்கள் கூட அவை-