பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

101


வட்டம் இல்லாதவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு ஓடி, ஏதாவது ஒரு வட்டத்திற்குள் நிற்க முயற்சிக்க வேண்டும். கடைசியில், வட்டம் கிடைக்காத ஒருவர், இது போல் மலையிலே நெருப்பு ஓடு ஓடு என்று கத்த, ஆட்டம் மீண்டும் தொடரும்.

4.3. என்னுடன் வா (Come with me)

மலையிலே நெருப்பு ஆட்டம் போல் தான், ஏறத்தாழ, இதுவும் அமைந்திருக்கிறது.

இருக்கிறவர்களில் எண்ணிக்கையில் ஒன்று குறைவாக இருப்பது போல சிறு சிறு வட்டம் போட்டு, ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொருவரையும் நிற்கச் செய்துவிட வேண்டும்.

வட்டம் இல்லாத ஒருவர், அங்கே போய் அருகில் நிற்க, ஆட்டம் தொடங்கும்.

வட்டம் கிடைக்காதவர், ஒவ்வொரு வட்டத்திற்கும் சென்று, 7 அல்லது 8 பேரைத் தொட்டபடி, என்னுடன் வா என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். தொடப்பட்ட அவர்களும், அவர் பின்னாலேயே போய்க் கொண்டிருக்க வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், வீட்டிற்குப் போகலாம் என்று அழைத்து வந்தவர் சத்தம் போட, கூட