பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

107


செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை, விரட்டித் தொடுபவராக (it) இருக்கச் செய்ய வேண்டும்.

விரட்டித் தொடுபவர், வட்டத்திற்கு வெளிப்புறமாக வந்து நின்றவுடன், விசில் ஒலி மூலம் சைகை கிடைக்க, அவர் வட்டத்தைச் சுற்றி ஓடி வர வேண்டும்.

அப்படி ஓடிக்கொண்டிருக்கும் போதே, வட்டத்தில் நிற்கும் ஒருவரின், முதுகைத் தொட்டுவிட்டு ஓட வேண்டும்.

தொடப்பட்டவர், தொட்டவர் ஓடும் திசைக்கு எதிர்த்திசைப்புறமாக வேகமாக ஓடிவர, தொட்டவரும் தான் திசைப்புறமாக ஓடிவர, இரண்டு பேரும் ஓரிடத்தில் சந்திப்பார்கள்.

சந்தித்தவுடன், இருவரும் கைகளைக் குலுக்கிக்கொண்டு, வணக்கம், வணக்கம் என்று இரண்டு முறை கைகுலுக்கிய பிறகு, காலியாக இருக்கும் அந்த இடம் நோக்கி, வேகமாக ஓட வேண்டும்.

யார் முதலில் அந்த இடைவெளி இடத்தில் போய் நிற்கிறாரோ, அவர் வட்டத்தில் நிற்கும் ஒருவராக, இடம் கிடைக்காதவர் ஏமாளியாகிப் போகிறார்.

அவர் ஓடித் தொடுபவராக மாற, ஆட்டம் தொடரும்.