பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


5. சீருடல் பயிற்சிகள் (Gymnastics)

5.1. தோள்களில் உருளல் (Shoulder Roll) (படம் பார்க்கவும்.)

a. தோள்களில் உருளுவதற்கு முன்னதாக ஆயத்தமாக நிற்றல். b. தலையை சாய்த்து, தோள்களை பக்கவாட்டில் திருப்புகிறபொழுதே தோள்பக்கமாக உருண்டு, முழுங்கையைத் திருப்புதல். c. தோள்பட்டையில் படுவது போல குட்டிக் கரணம் அடித்து, உருளல். தரையில் உருளும்போது முதுகுப் பட்டையையும், இடுப்புப் பின்பகுதி தசைகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

d. உருண்ட பிறகு எழுந்து நிற்றல்.