பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

11


இடம் பெற்ற விதம் எடுப்பாக இருந்ததே தவிர, பிடுக்காக செயல்படவில்லை என்ற நிலை, இன்றும் தொடர்ந்து வருகிறது.

என்றாலும், உடற்கல்வியின் அவசியம் பற்றிய அறிவும் தெளிவும், இன்று மக்களிடையே மிகுதியான விழிப்புணர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.

ஆரம்பப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு 6 முதல் 11 வயது வரை குழந்தைகளுக்கு, கட்டாயமாக உடற்கல்விப் படிப்பும், உடற்பயிற்சித் தொகுப்பும், விளையாட்டு நடப்பும், வேண்டும் என்று, தலைவர்கள் விரும்பினர்.

அதற்கான ஆக்கபூர்வமான வழிகளில் திட்டங்கள் நீட்டினர். சட்டங்களும் செய்தனர். எண்ணிய யாவும், திண்ணமாக நடைபெற உதவினர்.

அந்த நன்னோக்கினை, நடைமுறைப்படுத்த உதவுகின்ற முறையில், விளக்கங்களும், விவரங்களும், செயல்முறைப்படுத்தும் சீரிய விதங்களும் இங்கே இடம் பெற்றிருக்கின்றன.

உடற்கல்வியின் நோக்கங்கள் :

உடற்கல்வியின் நோக்கமாவது-குழந்தைகளின் உடல் தரத்தை, உடல் பலத்தை வளர்த்து விடுவது; உள நலத்தை, உள வளத்தை, உள வலிமையை மிகுதிப்படுத்தி