பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குறைந்த வலிமையும், அரை குறை திறமைகளும், எதிர்ப்புச் சக்தியில் குறைவான அம்சம் கொண்டனவாகவும் இருக்கும்.

ஆகவே உடல் வலிமையை (Strength) உண்டாக்கிட வேண்டும். தசை நரம்புகளின் கூட்டான காரியங்களில் தேர்ச்சி பெருகுவதாகவும் அமைந்திடவேண்டும்.

இந்த வயதுக் குழந்தைகள், அதிக சுறுசுறுப்புடன் இருப்பார்கள். ஆர்வம் மிகுதியால் பரபரப்புடன் நடந்து கொள்வார்கள்.

அவர்கள் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் குறைத்து விடாமல், அதே சமயத்தில் அவர்கள் சீக்கிரத்தில் களைத்துப் போய் விடாமல், பாதுகாப்புடன் விளையாட்டில் ஈடுபட வைத்திருப்பது, மிக முக்கியமான காரியமாகும்.

குழந்தைகளின் ஆர்வம், வந்த வேகத்தில் (கொஞ்ச நேரம் இருந்து) விடை பெற்றுக்கொண்டு, பறந்தோடிப் போய்விடும்.

ஆகவே, அவர்கள் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் அதிகமாக வளர்ப்பது போலவும், நீண்ட நேரம் நிலை நிறுத்தி வைத்திருப்பது போலவும், பல விதமான செயல் முறைகள் கட்டாயம் இருந்தாக வேண்டும்.