பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


எண்ணிக்கை 2 இரண்டு கைகளால் இரு முனையில் பிடித்துள்ள நாலடிக் கம்பினை, தொடைக்கு முன்பாக, படுக்கை வாட்டில் பிடித்திருக்க வேண்டும்.

பயிற்சியின் ஆரம்ப நிலை என்பது, தொடைக்கு முன்பாக, படுக்கை வாட்டில், நாலடிக் கம்பினைப் பிடித்திருப்பது தான்.

ஒவ்வொரு பயிற்சிக்கும் 16 எண்ணிக்கை இடதுபுறம் 16 எண்ணிக்கை வலது புறம் என்று செய்யலாம்.

தேவைப்பட்டால், இடது, வலது புறம் என்று மாற்றி மாற்றியும் செய்யலாம்.

பயிற்சிகள்

1. எண்ணிக்கை 1. கம்பினை தொடை பகுதியிலிருந்து மார்புக்கு முன்புறமாக உயர்த்தி, இடது கால்பாதத்தை முன்புறமாக ஓரடி எடுத்து வைக்கவும்.

2. கம்பினை மார்பிலிருந்து இடது பக்கமாகக் கொண்டு சென்று, இடது காலை ஓரடி இடப்புறம் வைக்கவும்.

3. முதல் எண்ணிக்கை போல வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.