பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

243


2. 1. கம்பினை தலைக்கு மேலே உயர்த்திப் பிடித்து, இடது கால் பாதத்தால், பின்புறம் ஒரடி எடுத்து வைத்து நிற்கவும்.

2. கம்பினை மார்புக்கு நேராகக் கொண்டு வந்து, இடது கால் பாதத்தை, முன்புறமாகக் கொண்டு வரவும்.

3. முதல் எண்ணிக்கைக்குக் கொண்டு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.


3. 1. கம்பினை இடப்புறமாகக் கொண்டு போய், தலைக்கு மேற்புறமாகப் பிடித்து, மேலே பார்த்து நிற்கவும்.

2. கம்பினை பக்கவாட்டில் இறக்கி, கீழாகக் கொண்டு போய், தரையைத் தொட்டு வைத்து நிற்கவும்.

3. முதல் எண்ணிக்கைக்குக் கொண்டு வரவும்.

4. ஆரம்ப நிலைக்கு வரவும்.


4. 1. கம்பினை மார்புக்கு முன்புறமாக நிறுத்தி, இடது கால் பாதத்தை, ஓரடி இடது புறத்தில் வைத்து நிற்கவும்.

2.இடது கால் பின்புறமாகப் போய் வலது