பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

253


4.முன்புறமாக ஓரடி வலது காலை எடுத்து வைத்து, முன்புறமாக சரிந்து நின்று, தலைக்கு மேலே தட்டு பின்புறமாகத் தட்டு, திரும்பவும் செய்யவும்.

5.இடது காலை முன்புறமாக ஒரடி எடுத்து வைத்து, முன்புறமாக சரிந்து, தலைக்கு மேலே தட்டு. பின்புறமாகத் தட்டு - திரும்பவும் செய்க.

6.தலைக்கு மேலே தட்டி, இடது காலை உயர்த்தி, முழங்காலுக்குக் கீழாகத் தட்டி: தலைக்கு மேலே தட்டி, வலது காலை உயர்த்தி, முழங்காலுக்குக் கீழாகத் தட்டி - திரும்பத் திரும்பச் செய்யவும்.


10. 1.முன்புறமாகக் குனிந்து, தரைக்கு முன்பாகத் தட்டு.

2.குனிந்து கொண்டே பின்புறமாகத் தட்டு.

3.நிமிர்ந்து நின்று தலைக்கு மேலாகத் தட்டு.

4.ஆரம்ப நிலைக்கு வரவும்.

மாதிரிக்காக சில பயிற்சி முறைகளைத் தந்திருக்கிறோம். இன்னும் ஏற்ற வகையில், புதிய முறைகளைப் பின்பற்றிக் கற்றுத் தரவும்.