பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

254

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


11.4 பிரம்பு வளையப் பயிற்சிகள்

(Hoops Drills)

பிரம்புக் கம்பினால் செய்யப்பட்ட வளையம். இதன் விட்டம் 27 அங்குலம் இருக்கலாம். வசதிப்படி சிறிதாக பெரிதாக, அமைத்தும் கொள்ளலாம்.

ஆரம்ப நிலை என்பது : வளையத்தை இரு பக்கத்திலும் இரு கைகளால் பிடித்துக் கொண்டு, நெஞ்சுக்கு முன்பாக மிக அருகில் வைத்து, நிமிர்ந்து நேராக நிற்பது

1.1. வலது கை இடது தோளுக்கு அருகே வருவது போல் கொண்டு வந்து இடது கையை இடப்புறமாக வளையத்துடன் கொண்டுவா. இடது கையை சற்று தாழ்வாக வை.

2. வளையத்தை தலைக்கு மேலே உயர்த்தி, வலது கையை சற்று தாழ்த்தி வை.

3. முதல் எண்ணிக்கை போல. ஆனால் வலது புறமாக வளையத்தை வை.

4. ஆரம்ப நிலை.

2.1. தலைக்கு மேலே படுக்கை வசமாக இருப்பது போல் வளையத்தைப் பிடித்து, இடது காலை இடது புறமாக ஒரடி எடுத்து வை.