பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

43


வட்டம் போட்டபடி, ஏரொப்ளேன் பறப்பது போலவும், திரும்புவது போலவும், திடீரென்று நிற்பது போலவும் பாவனை செய்ய வேண்டும்.

சைக்கிள் ஒட்டுவது போல, கால்களை அசைத்தல், உயரே போய் வருகிற பந்தைப் பிடிப்பது போல தாவிக் குதித்தல்

நான்கு நான்கு பேராக பக்கவாட்டில் சேர்ந்து நின்று, ஒரே வரிசையாக முன்புறம் நடத்தல். அது போல, பின்புறம் வருதல் போன்ற செயல்களை செம்மையாகச் செய்ய பயிற்சி தரவேண்டும்.

6. சிறுசிறு தனிப்போர் விளையாட்டுக்கள் (Simple Combatives)

தனிப் போர் விளையாட்டுக்கள் என்பது, தன்னம்பிக்கை, தற்காப்புத்திறமை, தைரியம், நீடித்துழைக்கும் ஆற்றல், நுண்திறன் போன்ற குணங்களை வளர்க்கும் வல்லமை வாய்ந்ததாகும்.

இவைகள் சுய வெளிப்பாடு உணர்வை (Self expression) வெளிப் படுத்தும் விசேஷத் தன்மை வாய்ந்தவைகளாக விளங்குகின்றன.

தனிப்போர் என்பது, எதிர்த்துப் போட்டியிடுபவரை தள்ளுதல், இழுத்தல், தள்ளிவிடுதல், போன்ற