பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


செயல்களாகும். எதிரே உள்ள எதிராளியுடன், மோதித் தமது திறமையை வெளிப்படுத்துகிற, தாக்கும் உணர்வின் வெளிப்பாடாகவே இப்போர் இருப்பதால், குழந்தைகளுக்கு நிறைவான குதுகலம் தரும் விளையாட்டுக்களாகவே இவை திகழ்கின்றன.

6.1. கையால் தள்ளுதல் (Hand Push)

இதில் கலந்து கொள்பவர் இருவர்

ஒருவருக்கொருவர் ஒரு அடி தூரம் இடைவெளி இருப்பது போல, அமர்ந்து, முன்புறம் உள்ள மேசை மீது வலது கையை முழங்கையில் ஊன்றி, பிறகு இருவரும் நன்றாக உள்ளங்கையால் பற்றிக் கொள்ள வேண்டும்.

தள்ளுங்கள் என்று கூறியவுடன், ஒருவருக்கொருவர் மற்றவர் கையை முன்புறமாகத் தள்ளி, அவரது சமநிலையை (Balance) இழக்கச் செய்திட முயல வேண்டும். இது தான் தனிப்போர் போட்டியாகும்.

சமநிலை இழந்து விடுகிறவர் அல்லது ஒருவரது கையைத் தள்ளிக் கொண்டே வந்து, தன் உடலுக்கருகில் தள்ளுமாறு விட்டு விடுகிறவள், தோற்றுப்போகிறவராகிறார். வலிந்து தள்ளிவிடுபவரே வெற்றி பெறுகிறார்.