பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

47


இவ்வாறு முனைந்து தள்ளிக் கொண்டே, முன்புறம் உள்ள கோட்டுக்கு எதிராளியைத் தள்ளி விடுகிற போட்டியாளரே, வெற்றி பெற்றவராவார்.

குறிப்பு: 1. முதுகினால் மட்டுமே தள்ள வேண்டும். 2. முதுகின் மேல் மற்றவரை ஏற்றிக் கொள்ளக்கூடாது. 3. முதுகின் மேல் ஏற்றாமல், தள்ளுவதற்கு மட்டுமே உரிமையுண்டு. 4. எதிரியின் முன்புறக் கோட்டை நோக்கியே தள்ள வேண்டும்.

6.5 முதுகின் மேல் தூக்கு (Back to Back lift)

போரிடும் இருவரும், தங்கள் முதுகுப்பக்கத்தை ஒட்டியவாறு, தங்கள் முழங்கைகளால் கோர்த்துக் கொண்டு முதலில் நிற்கவும்.

இருவரும் தயாராக நின்றவுடன், தூக்குங்கள் என்று ஆசிரியர் ஆணையிடுவார்.

ஒருவர் முன்புறமாகக் குனிந்து, மற்றவரை தன் முதுகின் மேல் தூக்க முயல்வார். இன்னொருவரும் மற்றவரை, தன் முதுகின் மேல் ஏற்ற முயல்வார்.

யார் முதுகின் மேல் மற்றவரை தூக்கிவிடுகிறாரோ, அவரே வெற்றி பெற்றவராவார்.