பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


இழுங்கள் என்று கூறியவுடன், இருவரும் தங்கள் பக்கம் நோக்கி, அந்தக் குச்சியை வலிந்து இழுக்க வேண்டும்.

அவ்வாறு குச்சியை இழுத்து, எதிராளியை தம்பக்கமாக வருமாறு இழுத்துவிட்டால், அவரே வெற்றி பெற்றவராவார்.

குறிப்பு : இரண்டு கால்களையும் நன்றாக, தரையில் அழுத் தி ஊன்றித் தான், இழுத் தலை ஆரம்பிக்கின்றார்கள். அவர்களில் யாராவது ஒருவரின் ஒரு காலோ அல்லது இரு கால்களோ, நகர்ந்து முன்புறமாக வந்துவிட்டால், அவர் தோற்றவராகி விடுகிறாள்.

6.4. முதுகால் முதுகைத் தள்ளுதல் (Back to Back push)

போரிடும் இருவரும், தங்கள் முதுகுப் பக்கத்தைக் காட்டிக்கொண்டு, ஒட்டி நின்று, இரண்டு முழங்கைக்குள்ளும் கோர்த்துப் பிடித்துக் கொண்டு தயாராக நிற்க வேண்டும்.

அவரவர் முன்புறத்தில், 5 அடி தூரத்தில் ஒரு கோட்டினைக் கிழித்துக் குறித்து வைத்திருக்க வேண்டும்.

தள்ளுங்கள் என்று கூறியவுடன், இருவரும் தங்கள் முதுகினால், மற்றவர் முதுகைத் தள்ள வேண்டும்.