பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா


6.6. பின்புறமாக குச்சியை இழு (Back to Back Stick Pull)

முன்னர் விளக்கிய தனிப்போரில் உள்ளது போல், போட்டியிடும் இருவரும், முதலில் வந்து முதுகுப்புறம் முதுகு இருப்பது போல நிற்க வேண்டும்.

அவர்களில் ஒருவர், தன்கையில் 3 அடி நீளமுள்ள ஒரு குச்சியை இருகைகளாலும் பிடித்திருக்க அவரைப் போலவே, மற்றவரும் அதே குச்சியை தன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டும். (முன் போட்டிகளில் முழங்கைகளால் கோர்த்துக் கொண்டிருந்ததை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்).

ஒவ்வொருவர் முன்புறத்திலும் இரண்டு அடி தூரத்திற்கு ஒரு கோடு போட்டிருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

இழுங்கள் என்று ஆணையிட்டவுடன், இருவரும், தங்களின் முன்புறக் கோட்டை நோக்கி, எதிரியை இழுக்க வேண்டும்.

யார் முதலில் நமது கோட்டுக்கு எதிரியை இழுத்து வந்து விடுகிறாரோ, அந்தப் போட்டியில் அவரே வென்றவராவார்.