பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

89


கரளா கட்டை, அல்லது சீசா மாதிரி இருப்பது போல கட்டைகளை அருகருகே வைக்கச் செய்து, 10 அடி தூரத்தில் இருந்து பந்தை உருட்டி அவற்றை இடித்து விழச் செய்தல், ஒரு தடவை பந்தை உருட்டும் போது எத்தனை கட்டைகள் விழுந்தன என்று எண்ணி, 5 முறை வாய்ப்பு வழங்குதல்.

கரளா கட்டைகளை ஒரடி இடை வெளி இருப்பது போல வரிசைகளாக வைத்து, அந்த இடைவெளிக்குள் பந்தை உருட்டுதல் (கட்டைகள் விழாமல்.)

குழந்தைகளை பந்தால் குறிபார்த்து அடிக்கலாம், அல்லது உருட்டலாம். இப்படி ஒவ்வொரு திறமையிலும் வாய்ப்பு தந்து விளையாடச் செய்தல்.

குழந்தைகளை அணி அணியாகப் பிரித்துக் கொள்ளவும். 5 அல்லது 10 குழந்தைகள் அணி, ஒரு சுவரில் 2 அல்லது 3 அடி உயரத்தில் ஒரு வட்டம் போட்டு, அதில் படுமாறு பந்தை எறிதல். அணியினர் எத்தனை பேர் வட்டத்திற்குள் படுமாறு பந்தை எறிந்தனர் என்று கணக்கிட்டு, வெற்றி பெற்ற அணியை அறிவிக்க வேண்டும்.

பிரம்பு வளையம் (Hoop) ஒன்றை 5 அடி தூரத்திற்கு அப்பால் ஒருவரைப் பிடிக்கச் செய்து, குறிப்பிட்ட இடத்திலிருந்து, வளையத்திற்குள் நுழைந்து போகுமாறு பந்தை எறிதல்.