பக்கம்:குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியும் விளையாட்டும்

97


ஒரு குழுவில் உள்ளவர்கள், தங்களிடம் இருக்கிற பந்தை எதிர்க்குழு விளையாடுகிற வெளி வட்டம் நோக்கி உதைக்க வேண்டும்.

அந்தப் பந்து தங்கள் வெளி வட்டத்திற்குப்போகாத வண்ணம், மறு குழுவினர் தடுத்து நிறுத்த வேண்டும்.

அப்படி தடுத்திட முயன்றும் முடியாமல், வெளி வட்டத்திற்குப் பந்து போகுமாறு விட்டு விட்டால், உதைத்தக் குழுவிற்கு, 1 வெற்றி எண் கிடைக்கும்.

பிறகு, அடுத்த குழு, தங்களுக்கு உதைக்கும் வாய்ப்பைப் பெற்று உதைத்தாட ஆட்டம் தொடரும்.

மொத்த நேரமும் (20 நிமிடம்) விளையாடிய பிறகு, எந்தக் குழு அதிக வெற்றி எண்களை எடுத்திருக்கிறதோ, அந்தக் குழுவே வென்றதாகும்

குறிப்பு: வெளி வட்டத்திற்குப் பந்தை விடாமல் தடுக்க முயல்கிற குழுவினர், கால்களால் பந்தைத் தடுத்து நிறுத்தலாம்.

கைகளால் பந்தைப் பிடித்துக் கொள்ளலாம். தலையால் இடித்தும், பந்தைத் தள்ளிவிடலாம். தலைக்கு மேலாகப் போகிற பந்து, அல்லது எட்டாமல் வெளியே போகிற பந்து 'அவுட்' என்று அறிவிக்கப்பட்டு, மீண்டும் ஆட்டத்தைத் தொடருகிற வாய்ப்பை மறு குழு பெற்றுக்கொள்ளும்.