பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

{}

எழுத்தை அனுப்ப வேண்டியிருக்கிறது. பத்திரிகைக்காரன் புத்தக வெளியீட்டுக்காரன் மோவாய்க்கட்டைத் தடவ அப்பப்போ இங்கைக்கும், சென்னைக்கும் ஷட்டில் ஆவற துங்கறது சாத்யமான காரியமா? வியாபாரத்தில் வார ஒண்ணுரெண்டை ரயில்காரனும், மதறாஸ் ஒட்டல்களும், ரூம்களும் வலிச்சிட்டுப் போகிற அளவுக்கு நான் எழுத் துக்கு அர்ப்பணமாகவில்லை. அர்ப்பணித்துக் கொள்ற தாவது, ஆட்டுக்குட்டியாவது. சப்பாத்திக் கள்ளியில் ஆட்டுக்குட்டி மாட்டிக் கிட்டால், அதை விடுவித்து அனைத்துக் கொள்ற மேய்ப்போன் பைபிளோடு சரி. இப்போ அது மாதிரி, நேர்ந்ததுன்னா, அங்கேயே குழி தோண்டி ஆட்டுக்குட்டியை அதனுள் போட்டு, மேலே வைக்கோலை மூட்டம் போட்டு, பச்சை வேர்க்கடலையை அவிச்சுத்தின்கற மாதிரி தின்றால் அது ஒரு தனிருசி.

கருணாகரன் புத்தலை கடையை என்னிடம் பரிஷை Larawf ufrirást pran ? Fsfiurgir cool man; cold blood.

'வழிதப்பி, அர்ப்பணம், லகசியங்களில் மாட்டிக் கொண்டு விட்டால், அவிச்ச ஆட்டுக்குட்டிதான்.'

அட்ஜஸ்ட்மெண்ட் அட்ஜஸ்மெண்ட் இப்போ வாழ்க்கையின் தத்துவம் அதுதான். தன்னிச்சையாக நடந்து கொள்ள முடியாது. வயித்தில் ஒண்ணு, வாயில் ஒண்ணு. அதுதான் அட்ஜஸ்ட்மெண்ட் ஓங்கின கைதான் குடை நிழல், அதுதான் புத்தலை...வார்த்தைகளை அளவு பார்த்து, இடம் பார்த்து, ஓசை பார்த்து, தோடு கட்டற நாளுக்கு சலாம் வெச்சாச்சு. எழுத்தும் ஒரு தொழிற்சாலை தான் ப்ரதர்! காற்றுள்ள போதே துாற்றிக் கொள். பக்கத்தை நிரப்பு. கிரப்பிக் கொண்டேயிரு. பேர் வந்த பிறகு திரும்பிப் பார்க்க உனக்கு கேரம் கிடையாது; வேண்டாம், நீ கொடுத்ததெல்லாம் உனக்கே கசந்தாலும்