பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

எனக்குக் கன்னம் குறுகுறுத்தது. உங்களிடம் கான் மெனெக்கெட்டு சொல்லியிருக்கும்போது எ ன் ைன க் காட்டிக் கொடுத்து விட்டேளே!'

'காட்டிக் கொடுத்து விட்டேனா? என்னத்தைக் காட்டிக் கொடுத்துட்டேன்?' கருணாகரனுக்குக் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அவர் குரலின் வெல்வெட்டும் கூடிற்று. ஆளுக்கு ஆள் பாணி வேறு. புது ஆத்திச்சூடியில் சேர்த்துக் கொள்ளணும்.

'கான் இருக்கும் இடம் சோடை கூடத் தெரியக்கூடா துன்னு உங்களைக் கேட்டுக் கொண்டேனே!"

'இப்போ மாத்திரம் எனக்கென்ன தெரியும்? திடீர்னு வரிங்க, திடீர்னு மறைஞ்சு போlங்க மலையாள சீமையில் வாசம் மாந்த்ரீகத்தில், கண் கட்டு வித்தை அரிச்சுவடி முதலில் படிஞ்சுவிடும் போல இருக்குது.'

இந்த மனுஷன் உண்மையிலேயே ரூடா இருக்கான்.

கருணாகரன், நான் ஏதும் போலீஸ் குற்றம் செய்து விடல்லே. க்டன் வாங்கி ஏமாத்திட்டு ஒடி ஒளியல்லே. இந்த சுதந்திர நாட்டில் என் அந்தரங்கம் என் உரிமை."

கருணாகரன் தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கிக் கையை விரித்துப் புன்னகை புரிந்தார். அவர் சைகை எனக்கு ஆத்திரத்தைத்தான் விளைவித்தது. அதற்குப் பல அர்த்தங்கள் பண்ணலாம்.

உன்னுடைய இந்த சவாலுக்கும் என் அம்புறாக் கூட்டில் அஸ்திரம் இருக்கு. ஆனால், நான் தொடுக்க மாட்டேன்.

இன்று போய் நாளை வா,