பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4

உலகம் நீங்கள் கினைக்கிற மாதிரி இப்போ அவ்வளவு பரந்ததில்லை. ஒடி ஒளியறதுக்கு உகந்ததில்லை. அது ஒரு கூண்டுதான். நீங்கள் உங்களை romanticise பண்ணிக் கிறீங்க.

'ஓடி ஒளியல்லேன்னு நீங்கள் சொல்மீங்க. நான் என்னத்தைக் கண்டேன்?'

'சண்டை போடவே மெனக்கெட்டு வந்தீங்களா?”

ஓடி ஒளியணும்னு நினைக்கிறவனே அந்தரங்கத்தைத் தேடுபவனே குற்றவாளிதான். அந்தக் குற்றத்தை முடக்க இன்னும் சட்டம் ஏற்படவில்லை, அவ்வளவுதான். இந்த ரீதியில் இன்னும் எவ்வளவோ முடைந்து கொண்டு போகலாம்.

‘அப்பா! உங்களிடம் ஒரு சுபாவம் அதை நீங்கள் உணர்ந்தீர்களோ இல்லையோ, உங்கள் புத்திக் கூர்மை உங்களையே வெட்டுமளவுக்கு அதைத் தீட்டி விட்டீர்கள். எதிராளிக்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் எல்லாப் பதிலையும் நீங்களே சொல்லி விடுகிறீர்கள். கேள்வியும் உங்களுடை யது. பதிலும் உங்களுடையதா? எதிராளிக்கு ஒண்னுமே கிடையாதா? உங்களுடைய பதிலை அவன் வாயிலிருந்து எதிர்பார்க்கிறீர்களே தவிர, அவன் பதில்-அவனாகவே ைேனத்து அவனிடமிருந்து அவனிச்சையில் வெளிப்படும் அவனுடைய பதில், அது நீங்கள் ஏற்கனவே கினைத்து விட்ட பல பதில்களில் அடங்கி விட்டாலும்......'

கருணாகரன் கெட்டி. இரண்டு கைகளையும் தட்டி னால்தானே ஓசையென்று சைகையில் இறங்கிவிட்டார். கெட்டிக்காரன்.

கடையேறி வந்து பையன் மெளனமாக கின்றான். அவனைக் கண்டதும் கருணாகரன் பரபரப்பாக எழுந்து