பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3%

ஆண்டவனே, இந்த இருட்டில் எங்கேனும் மோதிக் கொள் ளாமல் இருக்கனுமே வழி தப்பாமல் இருக்கனுமே!

அதோ அதென்ன எட்ட, மரங்களிடையே ஆடும் வெளிச்சம் வாடை வீசுகிறது. பிணம் எரிகிறது. இந்த இருளில் வாசனைகள்தாம் வழிகாட்டி.

'ஜக்ஜக் ஜக்ஜக்'-எங்கோ வயற்காட்டில் மோட்டார் ஒடுகிறது. அதுவும் தெம்பாய்த்தானிருக்கிறது. கட, கடந்து கொண்டேயிரு.

ஒரு பிரம்மாண்டமான திரைச்சீலைக்கு வழிவிடுவது போல் சாலையின் இடப்புறம் மரங்கள் திடீரென ஒதுங்கிப் பின் விழுகின்றன. வானம் மரங்களின் சிறைகளினின்று விடுபடுகின்றது. அண்டப் பிடியிலிருந்து கிருஷ்ணபட்சம், பஞ்சமி நிலா உதயமாகிறது. அந்த வட்ட விளிம்படியில் ஏரி ஐலம் செவ்வெள்ளித் தகடாய் ஜ்வலிக்கிறது. சிற்றலை கள் கிளுகிளுக்கின்றன, மீன்களின் துள்ளோசை விட்டு விட்டுத் தெறிக்கிறது.

கொசுவின் நொய்ஞ்ஞல் இருளினின்றி இழை பிரிந்து நெருங்க நெருங்க மூச்சு ஓயாத கருவண்டாக மாறி, வெகு விரைவில் வானத்திலிருந்து தம்பூரின் ஸ்ருதி போல் ஒரு ஓங்காரம் இடம் பூரா பொழிக் து கிறைகின்றது. ஹா! ஏரி மேல் உயர ஒரு சிவப்பும், பச்சையும் மாறி மாறிக் கண் சிமிட்டின. திருவனந்தபுரத்திலிருந்து வந்து கொண்டிருக்கி றான், வருகிறான். வந்து விட்டான். ஒரு வளை வடித்து அதோ எட்ட எட்ட மறைந்து விட்டான்.

மறுபடியும் தனிமையாக விடப்படுகிறேன்.

இப்போ ரேடியோவை முடுக்கினால் பாலமுரளி கேட்கும். சாமணையால் பொறுக்கி வைரங்களைத் தோடில் பதிப்பது போலும், ஸ்வரங்களை கேர்த்தியாகத்