பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.

கவிதா சோகத்தின் அத்தரே ஆனந்த சிலையின் அடையாளம்.

பாலம், பாராங்கல், பெரிய மண்டபம்

ட, எண்ணங்களின் இன்பத் திளைப்பிலேயே நடை அலுப்பு தெரியாமலே என் இடத்தின் அடையாளங்களுக்கு வந்து விட்டேனே! ஆச்சு, இன்னும் அஞ்சு கிமிஷம்தான்.

உர்ஸ், என்னத்தை ஆக்கி வைத் திருக்கப் போகிறாள்? முழுச்சோம்பேறி, சாமி இன்னிக்கு வராது என்று சாவியை கூரை ஒலையிடுக்கில் (அசல் இடம் எங்களுக்குத் தெரியும்) ஒளித்து வைத்து விட்டுப் போயிருப்பாள்.

'க் ஹீ ச்-1”

ஆாக்கி வாரிப் யோட்டது. அலறியது, குரங்கா. அல்ல; வேறெந்த இரவுப்பறவை மறுகணமே, மேலே பலாக் கிளையினின்று பொத்தென்று என் கழுத்தில் ஒருவடம் விழுந்தது. மேலும் தானாகவே இன்னொரு வளையம் சுற்றிக் கொண்டது, கல்லாய் உறைந்து போனேன்.

கிலா வெளிச்சத்தில், கறுகறுவெனக் கூந்தல் கறுப்பில், வழவழவென்று நெளிவுகள் தாமே மாறிக் கொண்டு, தன்னைத்தானே சாட்டை உருவிக் கொண்டு என்னை ஏதோ கேட்க ஆயத்தத்தில் என் முகத்தெதிரே தலையை உயர்த்தி...மண்டையில் இரு லேக்கற்கள் கொதித்தன.

இன்னும் யோசித்துக் கொண்டேயிருக்கிறேன். இன்னும் வியப்புத் தணிந்த பாடில்லை. அந்தச் சமயம் எனக்கு நேர்ந்தது அதிர்ச்சி?...... பயம்? திட்ட வட்டமாய்த் தெரியவில்லை. “இன்றோடு என் ஆட்டம் முடிந்தது'