பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

ஊஹாம். நிச்சயமாய் வாய் குழறவில்லை. மனம் பேதலிக்க வில்லை.

விரக்தி அப்படியென்றால் அசலாய் TET67 அதுே

தெளிவு? திரை கிழிந்த மாதிரி அப்படிச் சொல்லிக் கொள்ளலாமா? ஆம் என்கிற பாவனையில் முனகு கிறேனோ?

பயங்கர பரவசம். தடம் மாறிப் போன உணர்வு. எல்லாம் ஒரே உயிரின் வியாபகம். அதன் மையத்தில் நான் இம்மாபெரும் உயிரோவியமாய் என்னிலிருந்து உயிரின் ஒளிக் கதிர்கள் புறப்பட்டுப் பரவி கழித்து என்னிலேயே திரும்பவும் அடைந்து கொண்டிருக்கின்றன. லோகோஸ் ருதியின் சுழிப்பில் நீ வேறு நான் வேறு. நீ யார், கான் யார்? ஸ்ருதி வெள்ளத்தின் துளும்பலின் விதிர்விதிர்ப்பு கள் எத்தனை எத்தனையோ? பேச்சு, பேச்சு, பேச்சின் வியர்த்தம். உருவங்கள் அர்த்தமற்றுப் போகின்றன. போன அர்த்தத்தில் நான் நாகலகல்,மி. இந்த அர்த்தத்தில் உன்னோடிருக்க உன்னிடம் வந்திருக்கிறேன். தனித்தனி அர்த்தங்கள் அர்த்தமற்றுப்போகின்றன. ஒரு அர்த்தம்ஒரே அர்த்தம் தான் உண்டு. பிரிதல் கூடுதல், சாவு, வாழ்வு, பிறப்பு எல்லாம் என்ன பித்துக் கொள்ளிதனம்? உனக்கும் எனக்கும் சொந்தம் விட்டுப் போயிடுமாடா? இன்று எனக்குத்தான் சாப்பாடு இல்லை. நீயும் பட்டினி கிடக்கணுமாடா?

என்னவோ தோன்றிற்று. என் கையில், கூடவே வளர்ந்து விட்டாற்போல் இருந்த வாழைப்பழச் சீப்பை து.ாக்கிப் பிடித்தேன். அதன் மேல் தாவிப் படர்ந்து கொண்டது. சிப்பை அப்படியே மெதுவாகக் கீழேயிறக்கி னேன். ஒரு பழத்தைப் பறித்து, உரித்து நீட்டினேன். அதை அது கல்விக் கொண்டது. நானும் ஒன்று உரித்துப்