பக்கம்:கோவூர் கிழார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23

“அரசன் வலிமை உடையவனாக இருந்தால் சோழ நாட்டுக்குள்ளேயே பகையாக இருக்கும் மன்னன் நெடுங்கிள்ளியை அடக்கியிருக்கமாட்டானா? போருக்கு அஞ்சுகிறதனால்தான் பெயருக்குச் சில படைகளே வைத்துக்கொண்டு காலத்தைக் கழிக்கிறான்” என்று அவன் எண்ணிக் கொண்டிருந்தான்.

இப்போது நலங்கிள்ளி தன் நாட்டைத் தாக்க முற்பட்ட செய்தி பாண்டியனுக்கு முதலில் வியப்பைத் தந்தது. ‘இந்த இளைய மன்னனுக்கு இவ்வளவு தைரியம் உண்டாகக் காரணம் யாது?’ என்று யோசித்தான். ‘இதுகாறும் நாம் வாளா இருந்திருக்கக் கூடாது. நாம் சோழ நாட்டின்மேல் படையெடுத்திருக்க வேண்டும். இப்போதும் ஒன்றும் குற்றம் இல்லை. நம்முடைய நாட்டினிடையே சோழர் படையை நெருக்கி நசுக்கிவிடலாம். பாவம்! சோழ மன்னன் வாழ்வு இதனோடு முடிவு பெறவேண்டியதுதான் போலும்!’ என்று அவன் மகிழ்ச்சி அடைந்தான். சோழர் படையின் அளவையும் ஆற்றலையும் நன்கு ஆராய்ந்து அறியாமலே, அது வெற்றி பெறாது என்று முடிவு கட்டிவிட்டான்.

குறிப்பிட்டபடி சோழர் பெரும்படை பாண்டி நாட்டிற் புகுந்தது. பாண்டிய மன்னன் மதுரையிலிருந்து தன் படையுடன் புறப்பட்டான். சோழர் படை ஆரவாரத்துடன் மேற்சென்றது. இரண்டு படைகளும் சந்தித்தன. போர் மூண்டது. நலங்கிள்ளி முதல்முதலாகப் போர் செய்யப் புகுந்தா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கோவூர்_கிழார்.pdf/28&oldid=1123296" இலிருந்து மீள்விக்கப்பட்டது