பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் திரு. தமிழ்வாணன் அவர்கள் (ஆசிரியர், கல்கண்டு', சென்னே..) வழங்கிய மதிப்புக் கருத்துரை: இலக்கணப் பிழை இல்லாத இக் கவிதை யைப் பற்றிய என் கருத்தைக் கேட்டது, என் பேறு. ஆழ்ந்த கருத்தை எளிதாக எடுத்துச் சொல்லுவது எளிதன்று; பெரிய ஆற்றல். இந்த ஆற்றலே வானம்பாடி’ என்ற இக் கவிதையிலே நான் காண் கிறேன். ஒருமுறை படித்தாலே மனதில் நிற்கிறது. (ஒ-ம்.) தமிழ்வாணன். வானம்பாடி. பக்குவக் கண்களை நீட்டி - எழிற் பாட்டின் அலைகளே ஒட்டி, திக்கெல்லாம் யாரையோ தேடி - உடல் திரிகின்ற வானம் பாடி! கொக்கென வாழ்பல பேரில் - உனக் கொத்திய காதலர் யாரில் சொக்கிப் பறக்கின்ருய் துள்ளி ? - அதைச் சொல்லிப் பறந்திடு கள்ளி ! - 142