பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைகள். ஆடோட்டி வந்ததங்கை அண்ண'வென்ருள்: 'அண்ணியெங்கே என்றவிழ்த்தான் ஆத்திரத்தை: "ஒடோடி வருகின்றேன் என்றுரைத்தே ஒடியுளாள் குடமெடுத்தே' எனமுடித்தாள்: பேடோடு பேசுதற்குத் துடித்தமனம் பேதுற்றுப் படபடென்றே அலறுகையில் காடோடி மானெனவே குதித்துவந்தாள்: கைவளையல் வரவுசொல்லி ஒலித்ததங்கே ! எழுந்த அந்த வளையிைெளி யாழிசையின் எதிரொலியாம்; அவன்செவிக்கோ தேனிசையாம்: விழுந்தவுடன் திரும்பிவிட்டான்; அந்நொடிக்குள் "அத்தா'னென் ருேரொலியைச் சொரிந்திட்டாள்; "கழுத்தென்ன அமுதவூற்றே: அன்றன்று கற்கண்டோ: எவைகூட்டிக் கலந்திட்ட பழுத்தஅன்பின் ஒலி'யென்ருன் 'போங்களத்தான் எனக்குனிந்தாள்; எங்குபோவான் : சொக்கி(ப்) போனன், (காய்ச்சீரான் அமைந்த அறுசீர் ஆசிரிய விருத்தங்கள்.) 37