பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை : உணர்ச்சிக்கு, அறிவு மெருகோடு கொடுக்கும் சொல்லுரு வமே கவிதை. மலரும் கவிதையின் மனத்தை உடனுக் குடன் உலகோர் சுவைக்க வேண்டும். நல்ல கவிதை அதைச் சுவைத்தோர் உள்ளத்தின் ஒரு மூலையில் பதிந்து கிடக்கும். இலக்கிய நினைவு எழும்போது அது தலைநீட்டிக் கொண்டும் இருக்கும். ஆண்டுகள் கடந்தாலும் அக் கவிதையைக் காணவேண்டும் என்ற எண்ணம் எழும். அதுபோது கவிதைத் தொகுப்பு வெளிவர வேண்டும். இக் கவிதைத் தொகுப்பு அவ்வகையில் வெளிவருகிறது. கவிஞர் கோவை. இளஞ்சேரஞரின் கவிதைகள் ஒவ்வொன் றும் ஒவ்வொரு வாழ்வியல் அடிப்படை கொண்டவை. முத்தும், வித்தும் போன்று கருத்துள்ளவை. பாலும், பாகும் போலும் எளியவை. சுளேயும், நுங்குமாய்ச் சுவைப்பவை. அவை இதழ்களில் வெளிவந்தபோது சுவைத்தோர் பலர்; பாராட்டியோர் பலர்; நாளடைவில் அவர்தம் உவமைகளே யும், கருத்துக்களையும் தம்மதாகக் கையாண்டோர் சிலர்; ஒருங்கு கூட்டிக் காண அவாக்கொண்டோர் சிலர். யாவர்க் கும் நிறைவாக இத் தொகுப்பு வெளிவருகிறது. இக் கவிதைத் தொகுப்பு தனிச் சிறப்புகளைக் கொண்டது. அகவியல், புறவியல், பொதுவியல் எனும் பகுப்பு அச்சிறப்பு களில் ஒன்று. அவற்றிற்கேற்பக் குறிப்பு காட்டும் படங் களைப் பெற்றுள்ளமை மற்றென்று. வெண்டாமரை இதழ் அன்ன தாளில் கருமணி பதித்தமை போன்ற அச்சமைப்பு வேருென்று. எளிதாகப் புரட்டிச் செல்லுமாறு அமைக்கப் பட்ட அமைப்பு அடுத்த ஒன்று. பல்வகை யாப்புகளில் கவிதை உருவாகியுள்ளமை இன்னென்று. யாப்பை இறுதி யில் குறித்திருப்பது மேலொன்று. யாப்பமைதி சிதையாத