பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவை. இளஞ்சேரன் உச்சியை மோந்திடின் உள்ளம் கிளர்ந்தெழும் ஒண்ணுதலை நச்சித் தடவிட கன்னரம் பின்புறும்; கன்னமதில் இச்சிச் செனுமுத்தம் என்பைக் குழைத்திடும்; வாயிதழின் எச்சில் துளிபடின் - என்ன கிலையெனச் சொல்லுமுண்டே ? வாழ்வில் முறுவல் ./ வழங்கிடா வன்கணர் வாய்மலரும்: தாழ்வில் நலிந்து தளர்ந்த உளமது தண்மையுறும் சூழ்வுறு காதற் . சுவையினுந் தானேர் மெருகொளிரும்: யாழ்குழல் மெல்லிசை யாவினும் மேன்மை மழலையதே. (கட்டளைக் கலித்துறைகள்.ர்