பக்கம்:சகல கலாவல்லி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெண்டாமரையும் தண்டாமரையும் &

நிற்பது. நுட்பமாகப் பார்ப்பது கூரிய தன்மை; விரிவாகப் பார்ப்பது அகலமாகிய தன்மை, -

'அஃகி அகன்ற அறிவென்னும்’

என்பது குறள். அறிவுக்குக் கூர்மையும் வேண்டும்; அகலமும் வேண்டும். கூர்மையும், அகலமும் இருந்தால் ஆழமாகப் பல நூல்களே ஆராயும் அறிவு கிடைக்கும்.

உள்ளம் பரந்து இருக்க வேண்டும். பரந்த மகுேபாவம் என்று சொல்வதைக் கேட்டிருக்கிருேம். தாமரை மலர் விரிந்து இருப்பது, தண்மையாக இருப்பது, வெண்மையாக இருப்பது, மணம் பொருந்தியிருப்பது. அதுபோல நம் உள்ளம் விரிந்த கொள்கையுடன் இருக்க வேண்டும். அன்பாகிய ஈரமும், அறிவாகிய மணமும் உடையதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கலைமகள் அங்கே இருப்பாள். சகல கலைகளின் அறிவும், ஞானமும் அந்த உள்ளத்தில் இருக்கும்,

கலைமகள் திருவருளேப் பெற்ற பலருள்ளும் கவிஞர்கள் மிகச் சிறந்தவர்கள். அவர்கள் உள்ளம் கற்பகனயால் விரிந்து கிடப்பது. விருப்பு ெவ று ப் பு இல்லாமலிருப்பதால் வெண்மையை உடையது. சுவரில் சித்திரம் தீட்ட வேண்டு மென்ருல் வெள்ளை அடிப்பார்கள். அப்போதுதான் தீட்டு கின்ற சித்திரம் அழகாக அமையும்; நல்ல காவியத்தை உள்ளத்தில் தீட்ட வேண்டுமானல் அந்த உள்ளம் விருப்பு வெறுப்பு இல்லாமல் துயதாகவும், தண்மையாகவும் இருக்க வேண்டும். கற்பனை செய்கின்ற உள்ளம் அத்தகையது. அதில் பரிவு இருக்க வேண்டும். அதுதான் ஈரம். பெரிய கவிஞர்களுடைய உள்ளம் விரிவும், பரிவும் உடையது; விருப்பு வெறுப்பு அற்றது: அறிவு சிறந்தது. இவைகள் எல்லாம் இருந்தால் அங்கே கற்பனைகளும், கருத்தும் நிரம்பிக் கிடக்கும். அதாவது கலைமகள் திருவருள் சித்திக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/14&oldid=557845" இலிருந்து மீள்விக்கப்பட்டது