பக்கம்:சகல கலாவல்லி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சகல கலாவல்லி

போன்று, பொருட்சுவையை முன்னுல் வைத்துப் பின்னல் சொற்சுவையைச் சொல்கிரு.ர்.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியில் பணித்தருள்வாய்.

"இரண்டு வகையான சுவைகளும் பொருந்தும்படி, நான்கு வகையான கவிகளேயும் நான் பாடுவதே என் வேை யாக இருக்க வேண்டும். அதற்கு உன் திருவருள் வேண்டும்" என்று கமைகளைப் பிரார்த்திக்கிருர், பாடும் பணி என்பது, வாழ்நாளில் பாடுவதையே முக்கியமான வேலையாக வைத்துக்கொள்வது.

'எனக்குத் தொழில்கவிதை' என்று பாரதியார் பாடுகிருர். அருணகிரிநாத சுவாமிகளும்,

'யாடும் பணியே பணியாய் அருள்வாய்'

என்று பாடுகிருர். அப்படிக் குமரகுருபரரும், பாடும் பணி யில் பணித்தருள்வாய்' என்று வேண்டுகிருர். அதற்குரிய ஆற்றலைத் தரவேண்டுமென்பது பொருள்.

இதற்கு மே ல் சகலகலாவல்லியின் பெருமையைச் சொல்கிருர், கமைகள் தாமரை மலரில் வீற்றிருக்கிருள். அவளுடைய வடிவம் தங்கத்தைப்போலப் பிரகாசிக்கிறது. கொடி போன்ற மென்மையான வடிவை உடையவள் அவள். கொடியில் தாமரை இருக்கும். இங்கே தாமரையில் கொடி இருக்கிறதாம். பங்கயாசனத்தில் பொற்கொடியைப்போலக் கமைகள் விற்றிருக்கிருள். - -

பங்க பாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே 1

என்று விளிக்கிருர் தாமரைப் பூவில் சேர்ந்திருக்கிற பொம் கொடி போன்ற தேவியே" என்று பொருள். க ைம க ள் வெண்மை நிறம் உடையவள். பொலிவோடு விளங்கு அதனுலே பொற்கொடியே என்று சொன்னுர், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/27&oldid=557858" இலிருந்து மீள்விக்கப்பட்டது