பக்கம்:சகல கலாவல்லி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடும் பணி 19

அடுத்ததாக அவளது வடிவத்தைச் சொல்ல வருகிருர், கமைகள் பொற்கொடி போல மெல்வியளாக இருந்தாலும், அவளுடைய அங்கங்களில் சில மிகச் சிறப்பாகத் தோன்று கின்றன. பருவ மடந்தையருக்கு நகிலும், கூந்தலும் சிறப் பாக இருக்க வேண்டும். அந்த இரண்டும் ஆண்மக்களுடைய உள்ளத்தைக் கவர்வன. பொற்கொடி போன்ற கமைகளுக்கு மலே போன்ற நகிலும், காடு போன்ற கூந்தலும் இருக் கின்றன. அந்த இரண்டையும் அவள் சுமந்துகொண்டிருகி கிருளாம். ஒரு கரும்பானது ஒரு மலையையும், ஒரு காட் டையும் சுமந்துகொண்டிருப்பதுபோலக் கமைகள் காட்சி அளிக்கிருள்.

கன.தனக் குன்றும் ஜம்பால் காடும் சுமக்கும் கரும்பே !

கனம் - டாரம். ஐம்பால் என்பது கூந்தலைச் சொல்லியது. கருமை, நீட்சி, நைப்பு. குழைவு, நுனி பிரியாமல் இருத்தல் ஆகிய ஐந்து வகை இயல்புடைமையால் கூந்தலுக்கு ஐம்பால் என்று பெயர். கூந்தலை ஐந்து வகையாக முடிப்ப துண்டு. கொண்டை முதலிய ஐந்து வகையாக முடிக்கப் படுவதால் ஐம்பால் என்று பெயர் வந்ததென்றும் சொல் வார்கள். பால் பகுப்பு. -

"குன்றையும், காட்டையும் சுமக்கும் கரும்பே' என்ருர்,

'மதுரம் வாய்மடுக்கும் குழற்கா •

டேந்தும்இள வஞ்சிக்கொடியே

என்று இந்த ஆசிரியா ட்ைசியம்மை பின்னத்தமிழிலும்

பாடுவார்.

முதல் பாட்டில் கரும்பைச் சொன்னவர் மீண்டும் கரும்பு என்று இங்கும் சொல்கிறர். சுவையுடைய கவிதையை அருளவேண்டுமென்று சொன்னவர், சுவையுடைய கரும் பாகக் கலைமகளை எண்ணுகிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/28&oldid=557859" இலிருந்து மீள்விக்கப்பட்டது