பக்கம்:சகல கலாவல்லி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

åť: சிகல் கலாவல்லி

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்

பாடும் பணியில் பணித்தருள் வாய், பங்க பாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே, கனதனக்குன்றும் ஐம்பால் காடும் சுமக்கும் கரும்பே, சகல கலாவல்லியே.

இதிலிருந்து எல்லா வகையான கவிதைகளேயும் பாட வேண்டுமென்ற ஆசை குமரகுருபரருக்கு இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் முதல் முதலாகப் பாடிய கந்தர் கலிவெண்பாவிலும் இந்த வேண்டுகோளே முருகனிடத் தில் விடுக்கிருர், - - -

- - "பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்,சீர்ப் பேசும் இயல்பல்காப் பியத்தொகையும் - ஓசை எழுத்துமுதி லாம்ஐந் திலக்கணமும் தோய்த்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து'

என்று செந்திலாண்டவனே வேண்டுகிரு.ர். இங்கும் நான்கு வகையான கவிகளைப் பாடும் திறகனத் தரவேண்டுமென்று அம்முனிவர் கல்மகளேப் பிரார்த்திக்கிருள்.

கங்கைக் கரையில் திருமடத்தை அமைப்பதற்காக, நவாபிடம் சென்று வேண்டுகோள் விடுப்பதற்கு முன், அவளுேடு பேசுகின்ற ஆற்றலைப் பெறவேண்டுமென்று பாடினுலும், எல்லாக் காலத்துக்கும் பயன்படுகின்ற புலமையையும் வேண்டுகிருர், இந்த முனிவர்.

பெரியவர்கள் சில காலம் இருக்கும் பயனே மாத்திரம் வேண்டமாட்டார்கள், பல காலம் நிலத்திருக்கும் பயனேயே வேண்டுவார்கள் என்பது இதல்ை தெளிவாகிறது. பாடும் பணியை வேண்டிய குமரகுருபர முனிவர் கலைமகள் திருவரு ளாலும், செந்தில் ஆண்டவனின் திருவருளாலும் அதைச் சிறப்பாக அடைந்தார். . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/29&oldid=557860" இலிருந்து மீள்விக்கப்பட்டது