பக்கம்:சகல கலாவல்லி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி மழை

கேல கலா வல்லியை மயிலாக உருவகம் செய்கிரும் குமரகுருபர முனிவர். மயில்தோகையை நீட்டியபடி உலா விஞல் அத்தனே அழகாயிராது. அது தன் கலாபத்தை விரித்து ஆடிக் களிக்கும்போது, பார்க்கப் பதிஞயிரம் கண் வேண்டும். -

சகலகலாவல்லி என்ற மயில் ஆடிக் ഭിക്ക றதாம்.

மயில் மழை பெய்யும் நிலையில் உள்ள மேகத்தைக் கண். டால் தோகையை விரித்து ஆடும். கார்காலத்தில் வானதி தில் மேகம் பரந்து நுண் துளி துரவும்பொழுது அது மிகவும் ஒய்யாரமாகத் தோகையை விரித்து. அப்படியும் இப்படியும் அசைந்து அசைந்து ஆடும். -

பரந்து விரிந்து கிடக்கிறது. கடல், எல்லேயிறந்து ஆம் மிக்கு அலைவீசி எறியும் கடல் எவ்வளவு விரிந்து பரந்திருந்: தாலும் அதன் நீர் தாகத்தைப் போக்காது. அது உப்புக் கரிக்கும் நீரை உடையது; உவர்க்கடல் என்று சொல்லு வார்கள். யாருக்கும் பயன்படாமல் தம் செல்வத்தைக் குவித்துப் பாதுகாக்கும் உலோபிகளுக்குக் கடலே உவமை கூறுவார்கள், "உவர்க்கடல் அன்ன செல்வரும் உளரே' என்பது பழம் பாட்டு. ஆயினும் அந்தக் கடல் இல்லா விட்டால் உலகுக்கு மழை இராது. கடலிலுள்ள நீரை முகந்து மேகம் மழை பெய்கிறது. கடலில் உள்ள நீரை அப்படியே மொண்டு கொண்டு வந்து பெய்வதில்.ை கடல் நீரில் உள்ள உப்புத் தன்மையை விட்டு விட்டு நன்னி ராக்கி மழையாகப் பெய்கிறது. உப்புநீர் ஆவியாகும் போது உப்புக் கீழே தங்கி விடுகிறது. அந்த ஆவியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகல_கலாவல்லி.pdf/30&oldid=557861" இலிருந்து மீள்விக்கப்பட்டது