பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சங்க இலக்கியத்தில் உவமைகள்

வகைகளைத் தனித்தனிப் பெயரிட்டு அணி வகை களாகக் காட்டுகின்றன. இவற்றின் அடிப்படையை வைத்துக் கொண்டு சங்க இலக்கிய உவமைகளைக் காணும் பொழுது அவற்றின் அணிவகைகளும், சொல்லியல் நயங்களும், மரபு களும் புலப்படுகின்றன. அவற்றை ஈண்டு உவமை வகைகள் எனக்காட்டுதல் தேவையாகின்றது.

12. அகரவரிசையில் அமைத்துத் தனித்தனியாகக் காட்டும் பொழுது இவற்றைக் கீழ்வருமாறு வரிசைப்படுத்திக் காட்ட இயலும்.

1. அந்தாதித் தொடை உவமை 2. இடம் மாற்று உவமை 3. இணைப்பு உவமை 4. இரட்டை உவமை 5. இல்பொருள் உவமை 6. எடுத்துக்காட்டு உவமை 7. எதிர்மறுப்பு உவமை 8. ஐய உவமை 9. தடுமாறு உவமை 10. தற்குறிப்பேற்ற உவமை 11. திரிபு ഉ.ഖങ്ങഥ 12. நிந்தை உவமை 13. நிரல்நிறை உவமை 14. பல்பொருள் உவமை 15. பிறிது மொழிதல் அணி 16. பொது நீங்கு உவமை 17. பொருள் உவமை 18. மாலை உவமை

19. முரண் உவமை 20. முற்று உவமை

21. வேற்றுமை உவமை

எனப் பலவாறாகப் பிரித்துக்காட்ட இயலும். இவை சங்க இலக்கியத்தில் பயில்கின்ற அணிவகைகளாம்.