பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும 125

பின் பெரிதாகி அவள் தினைப்புனம் மேய்ந்ததைப் போல இருந்தது என்று கூறப்படுகிறது. உவமையில் வரும் செய்தி யாகிய குறியிறை என்பது சிறப்புத் தொடராக அமைந்து விட்டது. இது கதைபொதி உவமைக்கு முன் எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்டுள்ளது.

1.9.12. கூவல் மைந்தன் : கூவலாகிய கிணற்று நீரில் பசுவின் கன்று நீந்திக் கரையேறாமல் தவிக்கும் நிலையைக் கண்டு ஊமை ஒருவன் வாய் விட்டுச் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலையைத் தான் பெற்றிருப்பதாக ஒரு தலைவி கூறுகின்றாள். பேசும் வாய்ப்பைப் பெற்றமனிதனும் ஊமையாக இருக்கும் நிலையைக் காட்ட உயர்தினை ஊமன் என்று கூறப்பட்டுள்ள தன்மை இவ் உவமையை மேலும் சிறப்புடையதாக ஆக்குகின்றது. கூவலருகில் நிற்கும் மைந் தனின் செய்தி உவமையாக வந்திருப்பது இவ் உவமையின் தனிச்சிறப்பு ஆகலின் அத்தொடராலேயே இப் புலவர் அழைக்கப்பெற்றுள்ளார். இது முன்னர் இத்தலைப்பில் நடைபெறா நிகழ்ச்சி உவமையாதலுக்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது.

1.9.13. செம்புலப் பெயல் நீரார்: தலைவனும் தலைவியும் உள்ளத்தால் ஒன்று ஆகினர். அவன் தம் நெஞ்சு ஒன்றாகக் கலந்த நிலையை வானத்தில் பெய்யும் மழைநீர் வையகத்தில் விளங்கும் செம்புலத்தில் இயைந்து கலக்கும் நிலைக்கு உவமப் படுத்துகின்றான். எங்கோ பிறக்கும் நீர் எங்கோ உள்ள நிலத்தில் வந்து இயைவது முன்பின் உறவு அறியாத இருவர் நெஞ்சு ஒன்றாகக் கலக்கும் உயர் நிலைக்கு உவமையாகி உள்ளது. அச்செம்புலப் பெயல் நீர் அழகிய சொல்லோவியமாக அமைந்துவிட்டது.

செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே. -குறு.40/4-5.

1.9.14. தனிமகனார்: தலைவனைப் பிரிந்த தலைவி தான் மட்டும் வீட்டிலிருந்து தனித்து உணவு உண்டு உடம்பை மட்டும் பேணும் தனிமை நிலையை வெறுத்துக் கூறும் பொழுது, வெஞ்சின வேந்தன் பகையால் கலக்கி அழித்த ஊரில்

1. இதே தலைப்பில் பகுதி 1.6.3. (குறு. 39415) 2. இதே தலைப்பில் பகுதி 1.3.3. (குறு. 224/3-( ).