பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயங்களும் தனிச் சிறப்புகளும் 127

வளைத்து உடனே விடும் காட்சிக்கு உவமையாக வந்திருப்பது தனியழகாகும்.

கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும். -குறு. 54/3-4.

1.9.18. விட்ட குதிரையார்: மீனெறி தூண்டிலுக்கு உவ மிக்கப்பட்ட மூங்கில் மேல் எழும் அதே காட்சி தூண்டிவிட்ட குதிரை மேல்நோக்கி வேகமாகப் பாய்தலுக்கு உவமை செய்யப் பட்டுள்ளது.

விட்ட குதிரை விசைப்பின் அன்ன

விசும்பு தோய் பசுங்கழை -குறு. 74/1-2.

1.9.19. வில்லக விறலினார்: தலைவனோடு தான் இருந் தால் இரண்டு உடலைப் பெற்றிருப்பதாகவும். அவனோடு துயின்றால் வில்லை அகப்படுத்திய விரல்களைப் போலப் பொருந்திக் கவவுக்கை நெகிழாமல் வாழும் வாழ்வைப் பெற்ற தாகவும் கூறுகின்றாள் தலைவி. அவன் தன் அகம்ற சேர்ந்தால் தனித்துப் பெறும் ஈர் உடம்போடு விளங்குவதாகவும் கூறுகின்றாள். ஈண்டு கவவுக்கை நெகிழாமல் இருத்தற்கு வில்லினைச் செறியப் பிடிக்கும் விரல்கள் உவமையாயின.

... தண்துறை ஊரனோடு இருப்பின் இருமருங் கினமே கிடப்பின் வில்லக விரலின் பொருந்தி அவன் நல்லகம் சேரின் ஒருமருங் கினமே. -குறு. 370/2-5.

1.9.20. விழிக்கண் பேதையார்: மருண்ட விழியோடு கூடிய இளமையான மான்கூட்டம் ஒட என்று கூறும் வருணனைப் பகுதியில் அதனைப் பேதை என்று கூறிய உருவகம் அழகிய சொல்லோவியமாக விளங்குகிறது. மடமான் விழிக்கண் பேதை என்னும் தொடர் கவர்ச்சி மிக்கதாக உள்ளது. இத்தொடரைப் படைத்த ஆசிரியரின் பெயர் விழிக்கண் பேதையார் என்று நிலைபெறலாயிற்று.

...மடமான் விழிக்கண் பேதையொடு இனன் இரிந் தோட.

-நற். 242/8.

1.9.21. ஈண்டுத் தரப்பட்டுள்ள பெயர்களுள் கழைதின் யானையார் என்னும் பெயர் புறம் 73ல் வரும் தொடரை