பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 13

மாக விசும்பின் திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின் திருமுகத்து.

-அகம 253/24

12.2.2. பூ உயிர்த்தல் என்பது நடைபெறாத ஒன்று. உயிர்த்தல் என்பது மக்கட் பண்பாகும். இப்பண்பினை உவமையாக அமைக்கப்படும் மலருக்கு ஏற்றிக் கூறியிருப்பதும் இடம் மாற்று உவமை எனக் கூறலாம்.

பூ உயிர்த்தல் என்பது நடைபெறாத ஒன்று. உயிர்த்தல் என்பது மக்கட் பண்பாகும். இப்பண்பினை உவமையாக அமைக்கப்படும் மலருக்கு ஏற்றிக் கூறியிருப்பதும் இடம் மாற்று உவமை எனக் கூறலாம்.

பூ உயிர்த்தன்ன புகழ்சால் எழில் உண்கண்.

-கலி, 142/1

உருவகங்களில் இவ்வாறு உவமத்தன்மை QL అఉల్త్ ஏற்றிக் கூறப்படுதல் காணப்படுகிறது, கன்னி விடியல், குமரி ஞாழல் குழவித்திங்கள் நிலமகள் முதலியன இவற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைகின்றன. இவை உருவகம் என்ற தலைப்பில் ஆராயப்படும்.

12.3 இணைப்பு உவமை

அணிநூல்கள் இத் தனிச்சிறப்பை எடுத்துக்காட்ட வில்லை. உவமப்பொருள்களில் சில குறிப்பிட்ட பொருள்கள் இணைத்துக் கூறப்படுதல் சங்க கால மரபாக உள்ளது. மணியும் பொன்னும், ஒவியமும் பாவையும், ஐம்பெரும் பூதங்களும், திருமாலும் பலராமனும், காமனும் சாமனும், ஞாயிறும் திங்களும் மற்றும் இதைப்போன்று ஏனைய சில பொருள்களும் இணைத்துக் கூறல் ஒரு மரபாக உள்ளது. இவ்விலக்கிய மரபை ஒட்டி இணைப்பு உவமை என்ற ஒன்றினைத் தனித்துப் பிரித்துக் காணல் தகும்.

12.3.1. மணியும் பொன்னும்

மகளிரின் மேனி பொன்னுக்கும் அவர்களின் கூந்தல் நீலமணிக்கும் இணைத்து உவமப்படுத்தப்பட்டுள்ளன.

1. ஐங். 68/1-2 2. நற். 54/9-16 3. கலி. 102/15; பத். 4/384 4. புறம். 365/11