பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சங்க இலக்கியத்தில் உவமைகள்

என்று கொள்வர். இவ் அற நீதிகள் பயின்ற வழக்காக அமைவதற்கு இலக்கியப்பாடல்கள் ஒருசிலவே கிடைத்துள எனினும், தமிழகத்தின் அவற்றிற்கு முன்பு இலக்கிய வளமும் இலக்கண அறிவும் மிக்க நூர்கள் இருந்திருந்தன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனவே, உவமைகளில் அறவியல் அமைந்தமை தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறப்பான செய்தி யாகும். அவற்றுள் குறிப்பிடத் தக்கன கீழ்வருமாறு.

1.4.2. அறத்திறகு அடிப்படையாக நிலையாமை உணர்வு வற்புறுத்தப்படுவது அற நூல்களில் காணப்படும் பொது வியல்பாகும். உலக வாழ்க்கையை நாடகமாகக் காணும் காட்சி சங்க இலக்கியத்தில் உவமச் செய்தியில் இடம் பெறுதின்றது. திருவிழாக் காலங்களில் கூத்தாடுபவரின் தன்மையைப் போல, முறை முறையாக ஆடி மறைகின்றவர்களைக் கொண்டது இவ் உலகம் என்று பேசப்படுகிறது.

+ + 4 + + i + + விழவிற் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்து.

- புறம். 29/2224

1.4.3. இத்தகைய நிலையாமைக் கருத்துகள் மற்றும் இரண்டிடங்களில் கூறப்படுகின்றன. புற்றிசல் வாழ்வு போன்று போரில் மடிவோர் வாழ்வு அமைகிறது என்றும், பறவை கூடுவிட்டுப் பெயர்ந்து வேறு ஒர் இடத்தை நாடிச் செல்லுதல் போல உயிர் உடம்பு விட்டுப் பெயரும் தன்மையது என்றும் கூறப்படுகின்றன.

1.4.4. இவ்வாறு நிலையாமைக் கருத்தை உணர்த்த ஒருசில உவமைகளே எடுத்தாளப்பட்டுள்ளன. நேரிடையாக அறக் கொள்களையும் நீதிகளையும் உவமைகளில் மிகுதியாக வற்புறுத்தியுள்ளனர் என்பது பின்வரும் சான்றுகள் காட்டும்.

1.4.4.1 பொருளும் இன்பமும் அறத்து வழிப் படுதல் வேண்டும் என்னும் கருத்துப் புறநானூற்றுப் பாடலில் வற் புறுத்தப்படுகிறது. அறம் பொருள் இள்பம் என்னும் மூவகைப்

1. புறம் 51/911. 2. அகம் 113|2427.