பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 சங்க இலக்கியத்தில் உவமைகள்

1.4.4.3.1. கல்லாதும் அறநெறியைப் பின்பற்றாதும் பெற்ற வாழ்வின் முதிர்ச்சி, இருளும் பயனின்மையும் கொண்டது என்று வற்புறுத்தப்படுகிறது.

கல்லாது முதிர்ந்தவன் கண்ணில்லா நெஞ்சம்போல் புல்லிருள் பரத்தரூஉம் புலம்புகொள் மருள்மாலை

-கலி.130/68

அறஞ்சாரான் முப்பேபோல் அழிதக்காள்.

-கலி, 38/19

1.4.4.3.2. அறக் கொள்கைகளை மிகுதியாகக் கலித் தொகையே வற்புறுத்துகின்றது. அவற்றைத் தொகுத்துக் காணுங்கால் வறுமை கொடிது என்பதும், கொடை புகழைத் தரம் என்பதும், அத்தகையோர் செல்வம் பெருகும் என்பதும் மிகுதியாக வற்புறுத்தப்படுகின்றன என்பது தெரிகிறது.

1.4.5. நற்றிணை ஈகையின் சிறப்பையும் அதுவே நிலைத்த புகழ்ைத் தரும் என்ற செய்தியையும் வற்புறுத்த கின்றது.

இசைபட வாழ்வார் செல்வம் போலக் காண்டொறும் பொலியும் கதழ்வாய் வேழம்.

- நற். 217/12.

1.4.6. மேற்கூறப்பட்டவை அக்காலத்துப் புலவர்களின் உள்ள நிலையையும், அரசர்களின் உயர்ந்தவாழ்வையும், சமுதாய நிலையையும் காட்டுகின்றன. அரசர்களும் செல்வர் களும் ஈட்டியபொருள் பிறர்க்குப் பயன்படுவதே அறம் என்ற கொள்கை சங்க இலக்கியத்தின் உயில்நாடி என்று கூறலாம் இவையே அன்றிச் சமுதாய நல்லொழக்கங்கள் ஒரு சில ஆங்காங்குக் கூறப்படுவது மக்கள் ஒழுக்கத்திற்குக் கொடுத்து வந்த உயர் மதிப்பைக் காட்டுகின்றது. பொய்ச்சான்று பகர்தல்' அடக்கமின்மை, சான்றாண்மை, நன்றி ເopຄroul,” கல்வி

1. கலி 34/10

2. கலி 32/8 3. குறு 265/26 4. குறு 225/35; கலி 34/17