பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 15

மரபாக விளங்கியது. இவற்றுள் ஒரு சில கூட்டியும் குறைத்தும் கூறுதலும் உண்டு.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரள வின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்டே.

-குறு.3/1-4

நீர்நிலம் தீவளி விசும்பொடு ஐந்தும் அளந்து கடை அறியினும் அளப்பருங் குரையை.

-பதிற். 24/15-16

சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள் நீர் ஒரன்ன சாயல் தீஒ ரன்ன என்உரன் அவித்தன்றே. -குறு.98/4-5

நிலம் நீர் வளிவிசும்பு என்ற நான்கின் அளப்பு அரியையே நாள்கோள் திங்கள் ஞாயிறு கனையழல் ஐந்து ஒருங்குபுணர்த்த விளக்கத்து அனையை.

-பதிற் 14/1-4

ஈரம் உடைமையின் நீர்ஒர் அனையை

அளப்பு அரு மையின் இருவிசும்பு அனையை

கொளக் குறைபடாமையின் முந்நீர் அனையை

-பதிற். 90/14-16

மண் திணிந்த நிலனும்

நிலனேந்திய வீசும்பும்

விசும்புதைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத் தியற்கை போல. -புறம் 2/16

செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ் ஞயிற்றுப் பரிப்பும் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர் போல. -புறம். 30/1-5

காற்றொடு

எரிநிகழ்ந்தன்ன செலவின். -புறம்,41/16-17