பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 17

12.3.6. ஏனைய உலோகங்கள்

திருமணிபொருத திகழ்விடு பசும்பொன்

வயங்கு கதிர்வயிரமோடு உறழ்ந்துபூண் சுடர்வர

-பதிற். 16/1561

தலைநாள் செருந்தி தமனியம் மருட்டவும் கடுஞ்சூல் முண்டகம் கதிர்மணிகழா அலவும் நெடுங்கால் புன்னை நித்திலம் வைப்பவும்.

-பத். 3/147-49

வெள்ளி அன்ன விளங்கு சுதைஉரீஇ மணிகண்டன்ன மாத்திரள் திண்காழ் செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்.

-பத். 7/110-112

12.3.7. திருமாலும் பலராமனும், காமனும் சாமனும், ஞாயிறும் திங்களும், மள்ளரும் மகளிரும், களிறும் பிடியும், மானும் பிணையும், அன்றிலும் இணையும், மகன்றிலும் இணையும், அன்னமும் பெடையும், மீனும் மதியமும், கடலும் கானலும், இருளும் நிலவும், புலியும் யானையும் இவ்வாறு இணைப்படுத்திக் கூறியமை சங்க இலக்கிய மரபுகளுள் ஒன்றாகும். இம்மரபு இணைப்பு உவமை அமையக் காரணமாக இருந்துள்ளது. இவற்றிற்கு ஒவ்வோர் எடுத்துக் காட்டுக் கீழே தரப்படுகின்றது.

திருமாலும் பலராமனும்:

வலியொத் தீயே வாலியோனை புகழ்ஒத் தீயே இகழுநர் அடுநனை. -புறம். 56/12-13

காமனும் சாமனும்:

மீனேற்றுக் கொடியோன்போல் மிஞறார்க்கும் காஞ்சியும்

ஏனோன் போல் நிறங்கிளர்பு களுலிய ஞாழலும்

-கலி. 26/3-4

ஞாயிறும் திங்களும் :

தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெரும நீ நிலமிசை யானே. -புறம். 6/27-29