பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சங்க இலக்கியத்தில் உவமைகள்

கூறப்படுகிறது. இச்செய்யுளில் முன்னதைப் போலவே ஒன்றுக்கு மேற்பட்ட எடுத்துக் காட்டுகள் வந்துள்ளன.

அடைமல்கு குளவியொடு கமழும் சாரல் மறப்புலி உடலின் மான்கணம் உளவோ மருவின் விசும்பில் மாதிரத் தீண்டிய இருளும் உண்டோ ஞாயிறு சினவின் அச்சொடு தாக்கப் பாருற்றியங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய அரிமணல் ஞெமரக் கற்பக நடக்கும் பெரும்பகட்டுக்குத் துறையும் உண்டோ..... பொருநரும் உளரோ நீ களம் புகினே.

-புறம். 90/2-9, 13

12.6.3. முன்னமே மழை பெய்து விட்டதால் மழை மீண்டும் பெய்யாமல் மறுத்துவிட்டாலும் ஏற்கனவே தன் வளத்தை வாரி வழங்கிய மேகம் அதனால் மீண்டும் வளம் தரா விட்டாலும் உலகத்து உயிர்களுக்கு வாழ்க்கை இல்லை. அவ்வாறே பரிசிலர் ஏற்கனவே பரிசில் பெற்றுச் சென்று விட்டதால் மீண்டும் தர இயலாது என்று கூறுவது பொருந்தாது என்னும் கருத்தில் அமைந்துள்ள புறப்பாடலும் எடுத்துக் காட்டுவமைக்கு எடுத்துக் காட்டாகும்.

கழிந்தது பொழிந்தென் வான்கண் மாறினும் தொல்லது விளைந்தென நிலம் வளங்கரப்பினும் எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின் முன்னும் கொணடிர் என நும்மனோர் மறுத்தல் இன்னா தம்ம இயல்தேர் அண்ணல்.

-புறம். 203/1-6

12.6.4. புலி யானையை நோக்கிப் பாய்ந்து குறி தவறு மேயானால் அது ஒரு போதும் மனம் சோர்ந்து எளிதில் கிடைக்கக்கூடிய எலியை நாடிப் பாயாது. அது போலக் குறிப் பிட்ட வள்ளலை நாடிச் செல்லும் இரவலன் வேறு எவரையும் நாடான் என்று கூறப்படுகிறது. இதில் ஒரே எடுத்துக்காட்டு உவமை வந்துள்ளது.

புலிபார்த்து ஒற்றிய களிற்றிரை பிழைப்பின் எலிபார்த்து ஒற்றாதாகும்