பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 25

கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று நனியுடைப் பரிசில் தருகம். -புறம் 237/15-18

12.6.5. எடுத்துக்காட்டு உவமைகளை அடுக்கிக் கூறுதல் அக்கால இலக்கிய மரபு எனக் கூறத்தக்க வகையில் மற்றோர் எடுத்துக்காட்டும் அமைந்துள்ளது. பொதுவாக இவ் எடுத்துக் காட்டுகள் பழகிய கருத்தாகவே உள்ளன. அக் காலத்தில் அவர்கள் ஏற்றுக் கொண்ட கருத்துக்கள் எனக் கூறலாம்.

குரவு, தளவு, குருந்து, முல்லை என்று கூறப்படும் நான்கு பூக்கள் அல்லது வேறு பூக்கள் சிறப்புப் பெற்றில; வரகு, கதிர்த்தினை, கொள், அவரை இந்நான்கல்லது சிறந்த உணவுப் பொருள்கள் இல்லை; துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று நான்கு குடிகள் அல்லாமல் வேறு சிறந்த பழங்குடி மக்கள் இல்லை. இம்மூன்று செய்திகள் எடுத்துக்காட்டு உவமைகளாய் அமைகின்றன. அதே போல வீரக்கல்லைத் தொழுது வழிபாடு செய்வதே உயர்வழிபாடு ஆகும் என்றும், அதுவே தெய்வமும் ஆகும் என்றும் கூறப்படுகின்றன.

குரவே தளவே குருந்தே முல்லை என்று இந்நான்கு அல்லது பூவும் இல்லை; கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு இந்நான்கு அல்லது உணவும் இல்லை; துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான்கு அல்லது குடியும் இல்லை. புறம். 835/2-6

12.6.6 பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டில் மிகச் சிறப்பான செய்தி உவமையாக வந்துள்ளது. 'முத்தும் மணியும் பொன்னும் அமைந்த அணிகலன் கெட்டால் மீண்டும் அவற்றைச் செப்பனிட்டு அவ் அணிகலனைத் திருத்தலாம். மனிதரின் சான்றாண்மை குன்றிவிட்டால் மீண்டும் அதனை நிறுத்த இயலாது என்ற மிக உயர்ந்த கருத்தினை வைக்கின்றார்.

முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும் குரைய கலம்கெடில் புணரும்; சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசு அறக் கழிஇ வயங்குபுகழ் நிறுத்தல் ஆக அறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர். -பத்.8/13-18