பக்கம்:சங்க இலக்கியத்தில் உவமைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகைகள் 29

ஈங்கே வருவாள் இவள் யார்கொல் ஆங்கேஓர் வல்லவன் தைஇய பாவைகொல் நல்லார் உறுப்பெலாம் கொண்டியற்றியாள் கொல்

வெறுப்பினால் வேண்டுருவம் கொண்டதோர் கூற்றங்கொல்.

- கலி, 56/6.9

நற்றிணையில் வரும் பாடல் ஒன்றில் உவமைகள் இரண்டனை வைத்து அவற்றுள் ஐயத்தை எழுப்புகின்றது. 'உன்னை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்; பார்க்கின்றவர் பார்வை தப்பாத கவர்ச்சியைப் பெற்றுக் குறையா நலத்துடன் நிற்கின்றாய். அலைகள் வீசும் கடற்பரப்பில் அமர்ந்து வாழும் தெய்வமோ உப்பங்கழியின் பின்பக்கத்தில் நிலை பெற்று வாழ்கின்றாயோ

மடந்தையே நீ யார்? இனிச் சொல்லுவாயாக' என்று கேட்கிறான்.

யாரையே நின்தொழுதனன் வினவுதும் கண்டோர் தண்டா நலத்தைத் தெண்டிரைப் பெருங்கடல் பரப்பின் அமர்ந்துறை அணங்கோ இருங்கழி மருங்கின் நிலைபெற் றனையோ சொல்லினி மடந்தை. - நற்.155/4.

தலைவியின் மேனியில் படர்ந்த பசலை நீல மணியோடு மாறுபட்ட பசும்பொன்னோ மாமரத்தின் தளிரின்மேல் படர்ந்த மகரந்தப் பசுந் துகளோ என்ற ஐயம் எழுப்பப்படுகின்றது. இதுவும் உவமைகளுள் எழுப்பப்படும் ஐயம் எனலாம். இப்பகுதி கலித்தொகையில் வருகிறது.

மணிபொரு பசும்டொன்கொல் மாவீன்ற தளிரின்மேல்

கணிகாரம் கொட்டும்கொல் என்றாங்கு அணிசெல

மேனி மறைந்த பசலையவள்

- கலி 143/1

ஐய உவமைகள் பொதுவாக வியப்புணர்ச்சியால் வருவது என்று கூறலாம். மருட்கை ஆகிய மெய்ப்பாடு இதில் உடன் இயைகிறது. இவ் உவமைகளில் மருட்கை உணர்வு வெளிப்படை எனலாம். எனவே இ ல் ஐய உவமையை மருட்கை உவமம் என்று கூறுதலும் பொருந்தும்.